தேவாரா 'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா ?

28 புரட்டாசி 2024 சனி 16:08 | பார்வைகள் : 5354
ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவாரா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘தேவாரா’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதும் இந்த படம் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் ‘தேவாரா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் முதல் நாளில் 126. 32 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதைவிட சுமார் 46 கோடி ரூபாய் ‘தேவாரா’ அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1