நாள் முழுவதும் ஏசி-யில் இருந்தால் நம் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா..?
28 புரட்டாசி 2024 சனி 16:17 | பார்வைகள் : 1689
அதிக வெப்பம் நிலவும் காலநிலைகளில் ஏசி ஒரு உயிர்காப்பானாக விளங்குகிறது. குறிப்பாக இந்தியா போன்ற வெப்பம் அதிகமுள்ள நாடுகளுக்கு ஏசி மிகவும் அத்தியாவசியாமான ஒன்றாக உள்ளது. அதே சமயம் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதும் நல்லதல்ல.
ஏசியில் இருப்பதால் உடல் அதிக வெப்பமடைவது தவிர்க்கப்பட்டு உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம். குறிப்பாக கோடைகாலங்களில் நீர்ச்சத்து குறைபாடு, ஹீட்ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் நம்மை தாக்காமல் பாதுக்காகிறது. மேலும் லேட்டஸ்ட் மாடல் ஏசி-களில் தூசு மற்றும் இதர மாசுக்களை நீக்குவதற்கும், காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கும் பல்வேறு வித புதிய அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிக நேரம் ஏசி பயன்படுத்துவது காற்றில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலுமாக நீக்கிவிடும். இதனால் உங்கள் உடலிலுள்ள நீர்ச்சத்தும் விரைவாக குறையும். இதை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். அதிக நேரம் ஏசியில் இருப்பதால் சரும வறட்சி, கண்களில் எரிச்சல், மூச்சு விடுதலில் அசவுகரியம் போன்றவை ஏற்படலாம்.
இவற்றை தவிர நீண்ட நீரம் ஏசியில் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை வெகுவாக குறைந்து ஜலதோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சில நேரங்களில் ஏசியை சரிவர பராமரிக்காமல் பயன்படுத்துவதால் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் அபாயமும் உண்டு. இவற்றை தவிர நீண்ட நேரம் குளிரில் இருப்பது மூட்டு இணைப்புகளில் பிரச்சனையை உண்டாக்கலாம். குறிப்பாக அதிகம் உடல் இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
மேலும் அதிக நேரம் ஏசி-யில் இருந்தே பழகிவிட்டபடியால் நம் உடல் அதன் பிறகு இயற்கையான வெப்பநிலையில் சரிவர இயங்க முடியாத சூழல் உண்டாகிவிடும். ஏசியில் இருந்து வெளி வந்தவுடனோ அல்லது ஏசி இல்லமாலோ இருக்கும் போது அந்த இயற்கையான வெப்பநிலைக்கு ஏற்றது போல் மாறுவதற்கு நம் உடல் அதிக சிரமப்பட வேண்டியதிருக்கும்.
1. ஏசியினால் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்துக் கொள்ள அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. ஈரப்பதமூட்டியை (Humidifier) பயன்படுத்தி ஏசினால் ஏற்படும் வறட்சியை சமன்படுத்த முயற்சி செய்யலாம்.
3. சரியான கால இடைவெளியில் ஏசியை சுத்தம் செய்ய வேண்டும்.
4. ஏசியின் வெப்பநிலையை அதிக குறைவாகவோ அல்லது அதிக வெப்பநிலையிலேயோ வைக்காமல்
5. உங்களுக்கு எது சவுகரியமோ அந்த வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.
6. சரும வறட்சியை தடுக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.