Paristamil Navigation Paristamil advert login

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதுகிறதா ’பிளாக்’ படம்?

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதுகிறதா ’பிளாக்’  படம்?

28 புரட்டாசி 2024 சனி 16:25 | பார்வைகள் : 316


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் சோலோவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதே அக்டோபர் 10ஆம் தேதி, ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ’பிளாக்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் நிலையில், ’பிளாக்’ படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆன அதே தேதியில், பார்த்திபன் நடித்த ’டீன்ஸ்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது போலவே, ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் ’பிளாக்’ படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்