Paristamil Navigation Paristamil advert login

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கிறார்களா?

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கிறார்களா?

28 புரட்டாசி 2024 சனி 16:30 | பார்வைகள் : 4406


ஒரே படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் நிலையில், இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்த 'நந்தன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவருடைய அடுத்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந் இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக சிம்ரன் நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா அல்லது இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் காட்சி அந்த படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்