Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers நகர மக்களே... உங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது தெரியுமா?

Aubervilliers நகர மக்களே... உங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது தெரியுமா?

13 ஆனி 2020 சனி 10:30 | பார்வைகள் : 18946


93 ஆம் வட்டாரம் என்றாலே மிகபிரபலம் தான். Aubervilliers நகர் குறித்து இன்று சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 
 
villiers என்றால் என்ன அர்த்தம்.?? இந்தபெயர் இலத்தீன் மொழியில் இருந்து மருவி வந்தது. லத்தீன் மொழியில் villare எனும் வார்த்தை மருவி பிரெஞ்சில் villiers என வந்தது. 
 
இந்த வார்த்தைக்கு முதலில் `பண்ணை` என அர்த்தம் இருந்தது. பின்னர் நூற்றாண்டுகள் கழிய அது கிராமமாக மாறி, தற்போது villiers என்றால் நகரம் என அர்த்தம். 
 
அதை விடுங்கள். இந்த பெயரின் முதல் பாதி தான் மிக சுவாரஷ்யமானது..
 
Adalbertus எனும் வார்த்தையில் இருந்து தான் Auber எனும் வார்த்தை சுருங்கிப்போனது. 
 
இந்த பெயர் Anglo-Saxon எனும் இனத்தின் குடும்ப பெயராகும். அதாவது இந்த நகரத்தில் வசித்த பண்டய கால மனிதர்களின் குடும்ப பெயராகும். Old Norse மொழியினை ஆராய்ந்து இதனை கண்டறிந்துள்ளனர். 
 
அதாவது பண்டய கால மனித இனமான Auber மக்கள் வசிப்பதால் இந்த கிராமத்துக்கு Auber-villiers என அர்த்தம்.
 
இன்று தான் அங்கு யாரும் பண்டயகால மக்கள் வசிப்பதில்லையே... அப்படியென்றால் அவர்களை எப்படி அழைப்பது. பரிஸ் நகர மக்களை 'பரிசியோன்' என அழைப்பதைப் போல் Aubervilliers மக்களை Albertivillariens என அழைக்கலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்