இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
28 புரட்டாசி 2024 சனி 17:05 | பார்வைகள் : 2732
வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு கடந்த அரசாங்கம் வழிவகுத்த நிதி நிலைமைகளை, புதிய அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
முந்தைய அரசாங்கம் முடிவெடுத்தபோது, தேவையான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னர் பெப்ரவரி 1, 2025க்குள் தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கு மத்திய வங்கி முன்னர் பரிந்துரைகளை வழங்கியது.
நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு நிதியமைச்சகத்தினுடையது.