லெபனான் பிரதமரை தொலைபேசியில் அழைத்த பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்..!!
28 புரட்டாசி 2024 சனி 17:48 | பார்வைகள் : 4098
லெபனான் பிரமரை பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot, தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) இஸ்ரேல் படையினர் இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை பகல் மேற்படி தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேலில் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும், போர் நிறுத்தத்துக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் பெய்ரூட் அருகே ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் Hassan Nasrallah கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.