Paristamil Navigation Paristamil advert login

'பாகமதி 2' அனுஷ்கா நடிப்பில் உருவாகிறது?

 'பாகமதி 2' அனுஷ்கா நடிப்பில் உருவாகிறது?

29 புரட்டாசி 2024 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 3560


தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2018ல் ஜி.அசோக் இயக்கத்தில் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி சர்மா உள்ளிட்ட பலர் அனுஷ்கா உடன் நடித்து வெளியான 'பாகமதி' படத்தின் 2வது பாகம் விரைவில் உருவாகிறது. இதனை இயக்குனர் அசோக் உறுதிப்படுத்தியுள்ளார். இதிலும் அனுஷ்காவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதல் பாகத்தை விட இதில் அனுஷ்கா கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் எனவும், 2025ல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கு படமான 'காட்டி' மற்றும் முதல் மலையாள படமான 'காத்தனார்' ஆகியவற்றில் நடித்து வரும் அனுஷ்கா, அதனை முடித்ததும் 'பாகமதி 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்