பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்..!!

11 ஆனி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 21837
பிரெஞ்சு மொழி மீதான காதல் உலக மக்களிடையே எப்போதுமே குறைவதில்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உத்தியோக பூர்வ மொழியாக பிரெஞ்சினை கொண்டுள்ளனர்.
பல தொழில்சார்ந்த தனியார் நிறுவனங்கள் (பிரான்சின் நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய நாட்டு நிறுவனங்கள்) பிரெஞ்சு மொழியில் தங்கள் அறிக்கையினை, ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச ஒலிம்பிக் குழு, செஞ்சிலுவைச் சங்கள் நிறுவனம் உட்பட Médecins sans Frontières போன்ற நிறுவனங்களும் பிரெஞ்சு மொழியினை உத்தியோகபூர்வமாக கொண்டுள்ளனர்.
பிரான்சில் தவிர்ந்த எத்தனையோ நாடுகளில் (கனடா, பெல்ஜியம், இத்தாலி) பிரெஞ்சு மொழியினை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்துகின்றனர்.
நீதிமன்றங்களில் பிரெஞ்சு மொழி பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு நீங்கள் பிரெஞ்சு மட்டும் தான் பேசுவீர்கள் என்றால், இத்தாலி நீதிமன்றத்திலோ, கனடா நீதிமன்றத்திலோ பிரெஞ்சு மொழியிலேயே நீங்கள் பேசலாம். (ஜட்ஜ் ஐய்யாக்கு பிரெஞ்சு தெரியாவிட்டால் மொழி பெயர்ப்பார்கள்... டோண்ட் வொர்ரி..)
பல அமெரிக்க பன்னாட்டு நிறுவங்கள், (பெப்ஸி, மெக் டொனால்ட்) போன்ற நிறுவங்களுக்கு நீங்கள் பிரெஞ்சு மொழியில் மின்னஞ்சல் அனுப்பலாம். அவர்கள் கட்டாயமாக பிரெஞ்சு மொழியிலேயே பதில் அனுப்புவார்கள்.
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... உங்களுக்குத் தெரியுமா? பிரான்சில் உள்ள ஒரு நிறுவனம் உங்களுக்கு பிரெஞ்சு மொழியில் பதில் அளிக்க மறுத்தால்... நீங்கள் உடனடியாக அவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம்...
அட.. நல்லா இருக்கே!!
•