நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
29 புரட்டாசி 2024 ஞாயிறு 14:17 | பார்வைகள் : 1133
மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆனது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்பதை பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம். நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கும் உதவுகிறது, ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் ஆனது முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும். நெல்லிக்காய் சாறு செரிமான அமைப்பை வலுப்படுத்தும். உடன் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது. இது கொழுப்பை 'பேர்ன்' செய்யவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் சாற்றில் ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின்கள் உள்ளன மற்றும் கொழுப்பை சேர்க்காமல் ஆற்றலை அதிகரிக்கும் கூறுகளும் உள்ளன.
நச்சுக்களை நீக்குகிறது: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் அது உங்கள் உடல் அமைப்பில் உள் நச்சுத்தன்மையை நீக்கும். நெல்லிக்காய் சாற்றில் தண்ணீர் உள்ளது, இது அதிக சிறுநீர் உற்பத்திக்கு உதவும். அதிகப்படியான சிறுநீர் ஓட்டம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் சாறு சிறுநீர் தொற்றுகளையும் குறைக்கும்
கண் பார்வைக்கு நல்லது: கண் பார்வை திறனை அதிகரிப்பதில் நெல்லிக்காய் ஒரு கில்லாடி. நெல்லிக்காயில் கரோட்டின் உள்ளது, இது பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது. நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண்புரை, எரிச்சல் மற்றும் 'ட்ரை ஐஸ்' போன்ற பிரச்சனைகளைப் போக்கும்.
ஆற்றலை அதிகரிக்கும்: காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும். நெல்லிக்காய் ஜூஸை ஒரு எனர்ஜி பூஸ்டர் அல்லது எனர்ஜி ட்ரின்ங் என்றே கூறலாம். அது அப்படிதான் செயல்படுகிறது, நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பலப்படுத்தும் ஒரு வைட்டமின் ஆகும். நெல்லிக்காயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுப்பதற்கும் உதவுகிறது