Paristamil Navigation Paristamil advert login

பரிசில் ஒரு இராட்சத மண்டபம்..!

பரிசில் ஒரு இராட்சத மண்டபம்..!

9 ஆனி 2020 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 19529


1889 இல் நடந்த உலக கண்காட்சிக்காக கட்டப்பட்ட ஈபிள் கோபுரம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. ஆனால் அந்தக் கண்காட்சிக்காக ஈபிள் கோபுரம் மட்டும் கட்டப்படவில்லை. வேறு பல கட்டுமானங்களும் உருவாகியிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த இராட்சத மண்டபம். 
 
அதுவும் இரும்பினால் கட்டப்பட்டதுதான். அதுவும் ஒரு ‘அயன் லேடி’ தான். எங்கிருந்தோ கொண்டுவந்த கோடிக்கணக்கான தொன்கள் எடையுள்ள இரும்பை எல்லாம் உருக்கி, வார்த்து, வடித்து எடுத்து பெரும் பெரும் வளைவுகளாகவும், பாரிய தூண்களாகவும் உருவாக்கி, ஆணிகள் வைத்து பூட்டி, பார்ப்பவர்கள் மயங்கி விழும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டிடம் உருவானது. 
 
கட்டுவதுதான் கட்டுகிறோம் எதற்கு கஞ்சத்தனமாகக் கட்ட வேண்டும்? என்று யோசித்த பொறியியலாளர் Ferdinand Dutert அவர்கள், பரிசில் உள்ள ஒரு இருபது ஏக்கர் காணியை வளைத்துப் பிடித்து, அந்த 20 ஏக்கர் முழுவதும் ஒரே மண்டபமாகக் கட்டி முடித்தார். 
 
அந்த இருபது ஏக்கர் மண்டபம் தான் அப்போது உலகத்தில் இருந்த பெரிய்ய்ய மண்டபம். அதில் பலப் பல கண்காட்சிகளை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் 15,000 பேர் எந்தவித இடைஞ்சலும் இன்றி, குறிப்பாக ‘இரண்டு மீட்டர்’ சமூக இடைவெளி ஏதும் இன்றி தாராளமாகச் சுற்றிவரக்கூடியதாக அந்த மண்டபம் இருந்தது. 
 
அந்த இருபது ஏக்கர் மண்ட...... இருங்கள். அடிக்கடி அந்த இருபது ஏக்கரை இழுக்க வேண்டாம். மண்டபத்தின் உண்மையான பெயரைச் சொல்லி அழைப்போம். 
 
‘Galerie des machines’ என்பது அன்னாரின் பெயர். 
 
 
1889 கண்காட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் ஈபிள் டவரைப் பார்த்து வியப்பதா? இல்லை இந்த இராட்சத மண்டபத்தைப் பார்த்து மயங்கிவிழுவதா? என்ற குழப்பத்தில் இருந்தார்கள். 
 
ஒருவாறு 1889 ம் ஆண்டு கண்காட்சி முடிந்தது. திருவிழா முடிந்தால் கடையைச் சாத்துவதுதானே உலக வழக்கம். 
 
ஆனால் ஈபிள் கோபுரத்தையும் இந்த இருபது.... இல்லை இல்லை ‘Galerie des machines’ மண்டபத்தையும் விட்டு வைப்பது என்று தீர்மானித்தார்கள். 
 
அப்படியானால் ஈபிள் டவர் இங்க இருக்கு. இராட்சத மண்டபம் எங்கே?  
 
பதில் நாளை..!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்