Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - லெபனான் போரினை நிறுத்த பிரித்தானியா  அழைப்பு

இஸ்ரேல் - லெபனான் போரினை நிறுத்த பிரித்தானியா  அழைப்பு

30 புரட்டாசி 2024 திங்கள் 09:12 | பார்வைகள் : 3137


இஸ்ரேல் லெபனான் மீது  தாக்குதலை நடத்தி வருகின்றது.

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலின் குறித்த தாக்குதலில் 1992ஆம் ஆண்டிலிருந்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இதனால், மோதல் மேலும் தீவிரமைடைய வாய்ப்புள்ளதாகவும் இது பிராந்திய போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி போர்நிறுத்ததை வலியுறுத்தியுள்ளதோடு பிரித்தானிய அதிகாரிகளும் அதனை முன்மொழிந்துள்ளனர்.

போர் இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு ஒருபோதும் நன்மையை தராது என டேவிட் லாமி தெரிவித்திருந்தார்.

லெபனானில் உள்ள பிரித்தானிய மக்களை பிரித்தானிய அரசு விமான சேவைகளை அதிகரித்து, அவசர அவசரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்