அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்திய இஸ்ரேல்
30 புரட்டாசி 2024 திங்கள் 09:59 | பார்வைகள் : 3340
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ்-வை கொல்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்தி இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உடன் முக்கிய சில தளபதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ்-வை கொல்வதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டு ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் குறிப்பாக 2,000Ib (900-kg) 84 ரக வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க செனட்டர் மார்க் கெல்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
செனட் ஆயுத சேவைகள் ஏர்லேண்ட் துணைக் குழுவின் தலைவராக உள்ள மார்க் கெல்லி, இஸ்ரேல் தாக்குதலில் நாம் இன்னும் கூடுதலான வழிகாட்டு ஆயுதங்கள் மற்றும் கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதங்களை பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேலுக்கான அதிக அளவிலான ஆயுதம் வழங்கும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பிறகு இஸ்ரேலுக்கான ஆயுத வழங்கலை அமெரிக்கா அதிகரித்துள்ளது.