Paristamil Navigation Paristamil advert login

நெப்போலிய மாமன்னனின் எண்ணத்தில் உதித்த அற்புதமான யோசனை..!!

நெப்போலிய மாமன்னனின் எண்ணத்தில் உதித்த அற்புதமான யோசனை..!!

5 ஆனி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19141


நேற்றைய பிரெஞ்சுப் புதினத்தில் நாம் பார்த்த பிரான்சின் கடைசி அரசன் மாமன்னன் நெப்போலியன் 3 அவர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தபோது, கண நேரத்தில் அவரது எண்ணத்தில் ஒரு யோசனை தோன்றியது. 
 
‘தலைநகர் பரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதும் மரங்கள் நடவேண்டும்’ என்பதுதான் அந்த யோசனை. 
 
யாரை வைத்து மரங்களை நாட்டலாம்? யாரை பொறுப்பாகப் போடலாம்? என்று மாமன்னன் ஆட்களைத் தேடியபோது, பரிசில் இருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால், Tours நகருக்கு அருகே உள்ள ஒரு காலணியில் ஓர் அற்புதமான தோட்டக்காரர் வசிப்பது தெரிய வந்தது. 
 
‘அழைத்து வாருங்கள் அவரை’ என்று அரசன் கட்டளை இட, இராவோடு இராவாக, அரக்கப் பரக்க பரிசுக்கு வந்து சேர்ந்தார் Jean-Pierre Barillet-Deschamps எனும் பெயர் கொண்ட அந்த தோட்டக்காரர். 
 
வந்தவர் எப்படியான திறமைமிக்கவர் என்பது அரசனுக்குத் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் மரம் நடும் தனது திட்டத்தை அரசர் சொன்னார். ‘அதற்கென்ன நட்டா போய்ச்சு’ என்று இயல்பாகப் பதிலளித்தார் Deschamps. 
 
அதுமட்டுமல்ல அவர் ஓர் சிறந்த தரைத்தோற்ற வடிவமைப்பாளராகவும் மரங்கள், தாவரங்கள் குறித்த சிறந்த அறிவாற்றல் கொண்டவராகவும் விளங்கினார். பிறகென்ன ‘இப்போதே ஆரம்பியுங்கள்’ என்று அரசன் கட்டளை ஒன்றைத் தட்டிவிட, களத்தில் குதித்தார் Deschamps. 
 
அவர் அப்படி என்னதான் செய்தார்? 
 
நாளை...!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்