Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் கடைசி அரசனும் முதலாவது ஜனாதிபதியும்...!!

பிரான்சின் கடைசி அரசனும் முதலாவது ஜனாதிபதியும்...!!

4 ஆனி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19221


எல்லா நாடுகளிலும் காலாதி காலமாக நடைபெற்று வந்த அரசாட்சி முறை ஒழிந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகமானதை நாம் அறிவோம். 
 
இன்று உலகில் அரசன் - அரசி ஆட்சி முறை இல்லை என்றாலும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அதிகாரம் இல்லாத, கௌரவ அரசன் அல்லது அரசி முறை இருந்துகொண்டுதான் இருக்கிறது. 
 
அப்படியானால் பிரான்சை ஆண்ட கடைசி அரசன் யார்? அந்த அரசனுக்குப் பிறகு வந்த ஜனாதிபதி யார்? 
 
இருவருமே ஒருவர் தான். அவர்தான் பேரரசன் நெப்போலியன் 3 ஆவார். 1848 ம் ஆண்டு ‘இரண்டாம் பிரெஞ்சுக் குடியரசு’ காலத்தில் இவர் ஜனாபதியாக அந்த ஆண்டு டிசம்பர் 20 ம் திகதி பதவி ஏற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் பதவியில் இருந்த அவரால், அடுத்த தேர்தலை நடத்த முடியாமல் போக, 1852 ம் ஆண்டு டிசம்பர் 2 ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். 
 
பதவியில் இருந்து விலகியவர் எதற்கு சும்மா இருக்க வேண்டும்? அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வேறு நடக்கவில்லை. யோசித்துப் பார்த்த நெப்போலியன், மீண்டும் பிரான்சில் அரச ஆட்சி முறையைக் கொண்டு வந்து தானே அரசனாகி, 1871 ஆகஸ்ட் 31 வரை ஆட்சி புரிந்தார். 
 
இதுதான் ஒரே நபர் அரசனாகவும் ஜனாதிபதியாகவும் நாட்டை ஆண்ட கதை. இருப்பினும் இந்த நெப்போலிய மாமன்னன் செய்த ஓர் அற்புதமான செயலை இன்றுவரை பரிஸ் மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
 
அது என்ன? 
 
நாளை...!!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்