Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 14:14 | பார்வைகள் : 5022


ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
 
இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்