Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

Aubervilliers : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

2 ஐப்பசி 2024 புதன் 13:20 | பார்வைகள் : 7841


இன்று ஒக்டோபர் 2, புதன்கிழமை காலை Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு பிறந்த 40 வயதுடைய குறித்த பெண் முழு நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும், அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களும், தலையில் பலமாக தாக்கப்பட்ட அடையாளங்களும் பெண்ணின் சடலத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் தடயவியல் நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இக்கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்