பிரான்சில் உங்களைக் கண்காணிக்கும் நிறுவனம்..!!
1 ஆனி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19773
பரிசுக்கு அருகாமையில் உள்ள Montrouge நகரில் உள்ள ஒரு நிறுவனம். அதன் வேலை என்ன தெரியுமா? உங்களைக் கண்காணிப்பது.
கண்காணிப்பது என்றால், நீங்கள் எங்கே போகிறீர்கள்? வருகிறீர்கள்? என்ன சாப்பிடுகிறீர்கள்? இவை அல்ல.
மாறாக உங்களைப் பற்றிய தரவுகள். நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? மற்றும் ஆண்டு மாதம் திகதி உள்ளிட்ட ஏனைய தரவுகள். உங்கள் Carte Vitale இல் உள்ள இலக்கங்கள், உங்கள் தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்கள், நீங்கள் வசிக்கும் இடத்தின் இலக்கங்கள் என சகல விபரங்களையும் இலக்கத்துக்கு மாற்றி விரல் நுனியில் வைத்திருப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை.
உதாரணமாக பரிஸ் என்றால் 75 வது மாவட்டம் என்கிறோம். பரிசில் லாச்சப்பல் எங்கே உள்ளது என்றால், 75010 என்கிறோம். பொபினி எங்கே உள்ளது என்றால் 93 வது மாவட்டத்தில் என்று எல்லோரும் சொல்லுவோம்.
இப்படி மனிதர்கள் முதற்கொண்டு, மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள், தெருக்கள் என அங்குலம் அங்குலமாக இலக்கம் இட்டு, முழு சரித்திரத்தையும் சில இலக்கங்களில் அடக்கும் அந்த நிறுவனத்தின் பெயர் INSEE ஆகும்.
அதாவது Institut national de la statistique et des études économiques என்பதன் சுருக்கமே INSEE என்பது.
அதுசரி, இவர்கள் எப்படி இலக்கம் போடுகிறார்கள்? இவர்கள் கையாளும் தந்திரம், சூட்சுமம் என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.