Paristamil Navigation Paristamil advert login

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

2 ஐப்பசி 2024 புதன் 16:39 | பார்வைகள் : 1006


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

* மது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபட்ட வேண்டும்.

* தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

* குடி நோயாளிகளுக்கும், போதை அடி நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க டி-அடிக்ஷன் மையங்களை அரசு உருவாக்க வேண்டும்.

* மது மற்றும் போதை அடி நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும்;

* டாஸ்மாக் - அரசு மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்

* மது மற்றும் போதை அடி நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.

* அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்.

* மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும்.

* தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்கு கூறிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்