Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மொழியில் இப்படியும் சில வார்த்தைகள்...!!! (நேற்றைய தொடர்ச்சி)

பிரெஞ்சு மொழியில் இப்படியும் சில வார்த்தைகள்...!!! (நேற்றைய தொடர்ச்சி)

25 வைகாசி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19153


நேற்று இரண்டு வார்த்தைகளை தெரிவித்தோம் இல்லையா? இன்றும் விளையாட்டு தொடர்கின்றது.

இந்த வார்த்தைகளை கவனியுங்கள்...

<<Les chaussettes de l’archiduchesse, sont-elles sèches ? Archi-sèches.>>

நாக்கை எட்டாக மடித்து வளைத்து உள் இழுத்து.... அவதானம் சிக்கிக்கொள்ளப்போகின்றது. இதை சரியான உச்சரிப்பில் வாசிப்பதே சிரமம்... இதில் திரும்ப திரும்ப வேகமாக சொல்ல வேற வேண்டுமா என்ன??!!

அடுத்த வார்த்தையை கவனியுங்கள்... இதை ஆட்களுக்கு முன்னால் சொல்லும் போது அவதானம்.. அடியும் வாங்கவேண்டி வரும்...

<<As-tu vu le vert ver allant vers le verre en verre vert ? >>

பச்சை கண்ணாடி மீது பச்சை புழு செல்வதை கவனித்தாயா? என்பது இதன் அர்த்தம். அர்த்தத்தை விடுங்கள்... சின்ன சின்ன சந்தங்களால் வேறுபடும் இந்த வார்த்தை ஜாலத்தை கவனித்தீர்களா?...

சரி.. இன்னும் ஒன்று..

<<Ces six saucissons-secs-ci sont si secs qu’on ne sait si s’en sont>>

என்னாது சூசியமா..? அட... அதில்லப்பா... இதற்கு அர்த்தம் தேடி கண்டுபிடிப்பதை விடுத்து, இந்த வார்த்தைகளை உச்சரித்து பழகலாம்... மொழி ஆளுமை விருத்தி அடையும்.

இந்த பிரெஞ்சு புதினம் சிரிப்பை வரவைத்தாலும்... மிக பயனுள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்.. அல்லது இதை நண்பர்களுக்கு அனுப்பி 'வொய்ஸ் மெசேஜ்' இல் வாசித்து அனுப்ப சொல்லுங்கள்...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்