Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்

3 ஐப்பசி 2024 வியாழன் 08:05 | பார்வைகள் : 4914


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்