ஐ.நா பொதுச் செயலாளருக்கு இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க தடை
3 ஐப்பசி 2024 வியாழன் 08:27 | பார்வைகள் : 2406
ஈரானிய படையினர் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரசிற்கு, இஸ்ரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஏவுகணை தாக்குதலை அன்டானியோ குட்டாராஸ் கண்டிக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.
நிபந்தனை அற்ற வகையில் ஈரானின் மோசமான தாக்குதலை கண்டிக்க தவறும் எவரும் இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க தகுதியற்றவர்கள் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குட்டாராஸ் தீவிரவாதிகள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைவாளிகள் ஆகியோரை ஆதரிப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.