Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மொழியில் இப்படியும் சில வார்த்தைகள்...!!!

பிரெஞ்சு மொழியில் இப்படியும் சில வார்த்தைகள்...!!!

24 வைகாசி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21513


இன்றைய பிரெஞ்சு புதினம் உங்களுக்கு நிறைய ஆச்சரியங்களை தர உள்ளது. 
 
ஒவ்வொரு மொழியிலும் 'தங் டுவிஸ்ட்டர்' என ஒரு விளையாட்டு உண்டு. அதாவது ஒரே சத்தத்தை கொண்ட வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு வசனம் அமைத்து, அதை திரும்ப திரும்ப சொல்ல வைப்பது. 'ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு முடி நரை முடி..' போன்ற வசங்கள் தமிழில் மிக பிரபலம். 
 
'Red lorry Yello Lorry' என ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. (இதனை திரும்ப திரும்ப வேகமாக சொல்ல வேண்டும். நீங்கள் ஐந்து தடவைகள் சொன்னாலே 'பாஸ்' தான்...) 
 
சரி.. பிரெஞ்சு கதைக்கு வருவோம். பிரெஞ்சு மொழியிலும் இதுபோன்ற பல சுவாரஷ்யமான வார்த்தைகள் உண்டு.
 
உதாரணத்துக்கு இதை பாருங்கள்.. 
 
<<Si mon tonton tond ton tonton, ton tonton sera tondu>> 
 
கோயிலில் மணி அடிப்பது போல் கேட்டாலும், இதனை நீங்கள் மிக நுனுக்கமாக வாசித்து பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு என்ன அர்த்தம்? <<என் மாமா உங்கள் மாமாவை வெட்டினால், உங்கள் மாமா வெட்டப்படுவார்>> என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
 
இதுபோல் மற்றுமொரு வசனம் உள்ளது. 
 
<<Cinq chiens chassent six chats>> 
 
அடேங்கப்பா... வாயில் நல்லெண்ணை விட்டு கொப்பளிக்கனும் போலயே? 
 
இதற்கு என்ன அர்த்தம்? <<ஐந்து நாய்கள் ஆறு பூனைகளை வேட்டையாடுகின்றன>> என அர்த்தம்.
 
இதையும் பாடமாக்கி வையுங்கள்... உங்கள் குழந்தைகளுடன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி 'தங் டுவிஸ்ட்டர்' விளையாடுங்கள்...
 
நாளை மேலும் இரண்டு வார்த்தைகளுடம் வருகின்றோம்....

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்