Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வளைகுடா நாடுகள்

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வளைகுடா நாடுகள்

3 ஐப்பசி 2024 வியாழன் 10:20 | பார்வைகள் : 1212


இஸ்ரேல் நாடானது காஸா மீது தீவிர போர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் லெபனான் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மிக நெருக்கடியான கட்டத்தில் லெபனானுக்கு ஆதரவளிப்பதாக வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

கத்தாரின் தோஹா நகரில் முன்னெடுக்கப்பட்ட அசாதாரண அமைச்சர் கூட்டம் ஒன்றில் இந்த முடிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் சமீபத்திய மாற்றம் தொடர்பில் விவாதிக்கவே, வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளது. 

லெபனான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் மோதல்கள் அதிகரித்து வருவதை கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

மேலும், அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் வன்முறையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டாக நடந்துவரும் மோதலில் லெபனானில் இதுவரை 1,900 பேர்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,000 கடந்துள்ளது.

பெரும்பாலான இறப்புகள் கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. 

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட, பதிலுக்கு இஸ்ரேல் நிர்வாகம் போர் பிரகடனம் செய்தது. 

கடந்த 2 மாதங்களில் சிரியா, லெபனான், ஈரான் உட்பட பல நாடுகளில் இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்