Paristamil Navigation Paristamil advert login

தெரிந்த மெற்றோ! - தெரியாத தகவல்கள்..!! (பகுதி 2)

தெரிந்த மெற்றோ! - தெரியாத தகவல்கள்..!! (பகுதி 2)

13 வைகாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19200


உலகில் மிக நீண்ட நடைமேடையை கொண்ட மெற்றோ நிலையம் பரிசில் தான் உள்ளது. அதை தெரிந்துகொள்வதற்கு முன்னர், 
 
மெற்றோ சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா?
 
120 வருடங்களுக்கு முன்பு, 1900 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி முதல் மெற்றோ தொடருந்து வெள்ளோட்டம் கண்டது. 
 
1845 ஆம் ஆண்டே 'பரிசுக்கு என தனியே தொடருந்து சேவை' தேவை என திட்டமிட்டிருந்தாலும், அதை நடை முறை படுத்துவதில் பலத்த தடை ஏற்பட்டது. ஒருவழியாக 1870 களின் பிற்பகுதியில் இது சாத்தியமாகி மெற்றோ நிலையங்கள் கட்டப்பட்டன. 
 
முதலாவது மெற்றோ சேவை (முதலாம் இலக்க மெற்றோ) Porte Maillot இல் இருந்து Porte de Vincennes வரை பயணித்தது. 
 
ஜூலை 19, 1900 ஆம் ஆண்டு இந்த முதல் மெற்றோ இயக்கப்பட்டது. 
 
ஆரம்பத்தில் பரிசுக்குள் ஒன்பது மெற்றோ நிலையங்கள் போதும் என தீர்மானிக்கப்பட்டது. (ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க பிற்பாடு எந்த எண்ணிக்கை இரண்டு மடங்கானது) 
 
சரி, மேலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறோம்..
 
Châtelet–Les Halles நிலையம் தான். 800 மீற்றம் நீளமுடைய நடை மேடை இங்கு உள்ளது. (உலகில் உள்ள மிக நீண்ட நடைமேடைகளை கொண்ட மெற்றோ நிலையங்களில் இதுவும் ஒன்று! )
 
-நாளை.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்