Paristamil Navigation Paristamil advert login

திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

4 ஐப்பசி 2024 வெள்ளி 08:08 | பார்வைகள் : 1169


திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பான விசாரணைக்கு, சுப்ரீம் கோர்ட் புதிய குழு அமைத்தது. புதிய விசாரணைக்குழுவில் ஆந்திரா அரசின் விசாரணை அதிகாரிகள் இருவர், சி.பி.ஐ., இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் இருவர், உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் என 5 பேர் இடம் பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,' அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கு, இன்று(அக்.,04) மீண்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்