Paristamil Navigation Paristamil advert login

 உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க..

 உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க..

4 ஐப்பசி 2024 வெள்ளி 09:08 | பார்வைகள் : 801


கணவன்: ஏய் அங்க பாரு அங்க பாரு உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க..

(கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்த மனைவி ஓடிவந்து வெளியே வந்து பார்த்த போது குரங்குகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன அதைப்பார்த்த மனைவிக்கு வந்ததே கோபம். அடுத்து மனைவி சொன்னதுதான் செம ட்விஸ்ட்)

மனைவி: வாங்க மாமா... வாங்க அத்தை..வாங்க கொழுந்தனாரே.. வாங்க நாத்தனாரே என்று அழைக்க.. கணவன் செம பல்பு வாங்கினார். 

மனைவி சொன்னதற்கு பதில் கொடுக்க வேண்டுமே

கணவன்: "ஏய்..என்னடி வாய் ரொம்ப நீளுது..அவங்க எல்லாம் என்னோட அப்பா அம்மாவா?"

மனைவி: நீங்கதானங்க என்னோட சொந்தம்னு சொன்னீங்க.. உங்கள கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் உங்க வீட்டு ஆளுங்கதாங்க என்னோட சொந்தம் அதனாலதான் அப்படி வரவேற்பு கொடுத்தேன்.

கணவன்: ( பேச்சை மாற்ற வேண்டுமே) சரி சரி ஊர்ல இருந்து அப்பா அம்மா வரப்போறாங்களாம் போன் வந்துச்சு..

மனைவி : "எனக்கு ஒரே குளிர் ஜுரமா இருக்கு என்னால எந்த வேலையும் செய்ய முடியாது.. அவங்களை இன்னொரு நாளைக்கு வரச்சொல்லுங்க"..

கணவன்: அப்படியா இரு உடனே நான் போன்ல சொல்லிடுறேன்.. "அத்தை.. மாமா உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம் நீங்க அடுத்த மாசம் வருவீங்களாம்"...

மனைவி: "என்னது எங்க அப்பா அம்மாவா? அதை ஏன் நீங்க தெளிவா சொல்லலையே"..

கணவன்: "நீ எங்க சொல்ல விட்டே.. நான் சொல்லி முடிக்கிற முன்னாடியே உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டியே..( மைண்ட் வாய்ஸ்சில்.. நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்)

மனைவி: "உங்க அப்பா அம்மா பத்தி நான் சொன்னதுக்கு நீங்க என்ன என்ன பழி வாங்கிட்டீங்கல்ல..இருங்க உங்கள நான் வச்சிக்கிறேன்".

கணவன்: (மைன்ட் வாய்ஸ்) அடியே நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. பல்டி அடிக்கிறதுல நான் பிஎச்டி வாங்கியிருக்கேனாக்கும்..எங்க கிட்டயேவா?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்