டி20 உலகக்கோப்பை: இந்திய பெண்கள் அணி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை
4 ஐப்பசி 2024 வெள்ளி 09:32 | பார்வைகள் : 1010
சார்ஜா மற்றும் துபாயில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன.
"ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
பந்து வீச்சிலும் தீப்தி சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.
இதனால் முழு பலத்தையும் வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூட விரும்பும்.
நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது. இந்திய அணியை வீழ்த்த முனைப்பு காட்டும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
"பி" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்தது.