SARS வைரசும் பிரான்சும்..!!
 
                    8 வைகாசி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 24048
கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே பீடித்துள்ள நிலையில், பிரான்சில் சாவு எண்ணிக்கை 25,000 ஐ கடந்துள்ளது. 
2002 ஆம் ஆண்டு இறுதியில் உலகத்தை SARS எனும் வைரஸ் அதிர வைத்தது. கொரோனா போன்று இதுவும் சீனாவில் இருந்து பரவியதே. 
பின்னர் அங்கிருந்து நேரே ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. 
பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவி, இறுதியில் பிரான்சை வந்தடைந்தது இந்த SARS. 
SARS என்றால் <<severe acute respiratory syndrome>> என அர்த்தம். 
பிரான்சில் SARS வைரஸ் பாரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. வெறுமனே ஏழு பேர் மாத்திரமே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். அதில் ஒருவர் சாவடைந்திருந்தார். 
கிட்டத்தட்ட 20 வருடங்களை நெருங்க உள்ள நிலையிலும் இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நவீன விஞ்ஞானம் மீது பலத்த கேள்வி எழுப்புகின்றது..
கொரோனா வைரசினால் நாம் இப்போதே இவ்வளவு திணறுகிறோம்.. இந்த அளவிலான தாக்கம் அப்போது வந்திருந்தால் சேதத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. 
SARS வைரசினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 இற்கும் குறைவும். அதில் சாவடைந்தவர்கள் 10% வீதத்திற்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan