பல்பொருள் அங்காடிக்கு ஒன்றுக்கு - 12,000 யூரோக்கள் குற்றப்பணம்!

4 ஐப்பசி 2024 வெள்ளி 17:00 | பார்வைகள் : 15730
Saint-Prix ( Val-d'Oise ) நகரில் உள்ள Leclerc பல்பொருள் அங்காடிக்கு 12,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் விலை விபரம் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும், வாடிக்கையாளர்களை குழப்பும் வகையில் சில உணவுப் பொருட்களுக்கு விலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இந்த குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக சோதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாடிக்கையாளரின் வாங்கும் திறன் (pouvoir d’achat) வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, பொருட்களின் விலை, எடை போன்றவற்றை தெளிவாக காட்சிப்படுத்தப்படுத்துவதில் இறுக்கமான சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இதுவரை பல பல்பொருள் அங்காடிகளில் இதுபோன்று குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1