'கோட்' மோதிரம்.. விஜய்க்கு பரிசாக கொடுத்தது யார்?
4 ஐப்பசி 2024 வெள்ளி 14:49 | பார்வைகள் : 1376
தளபதி விஜய் நடித்த "கோட்" திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இன்று விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69’ படத்தின் பூஜை நடைபெற்றது. அந்த பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று தளபதி விஜய்யின் "தமிழக வெற்றி கழகம்" நடத்த உள்ள முதல் மாநாட்டிற்கான பூஜையின் புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சற்றுமுன் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கோட்" எழுத்துக்களை கொண்ட மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்த மோதிரத்தை பிரபல தயாரிப்பாளர் டி. சிவா, விஜய்க்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. டி. சிவா ஏற்கனவே "கோட்" படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.