Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பம் எவ்வளவு? - எங்கே..?? (நேற்றைய தொடர்ச்சி)

பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பம் எவ்வளவு? - எங்கே..?? (நேற்றைய தொடர்ச்சி)

6 வைகாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 18451


45.1°c எனும் வெப்பம் 2003 ஆம் ஆண்டு பதிவானது. இதுவே பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பமாக இருந்தது. 
 
பின்னர் 2019 ஆம் வருடம், இயற்கை மீண்டும் தனது கோரதாண்டவத்தை தொடங்கியது. 
 
2019 ஆம் ஆண்டின் கோடை காலத்தினை அவ்வளவு எளிதில் எவரும் மறந்திருக்க முடியாது.
 
வெப்பம்.. எங்கும் வெப்பம். நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் நீர்த்தேக்கங்கள், நீச்சல் தடாகங்கள் என தண்ணீர் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் படையெடுக்க தொடங்கினர். 
 
கடற்கரையில் 'தள்ளு முள்ளு' ஏற்படும் அளவு கூட்டம்.
 
அப்போதுதான் அந்த சம்பவம் பதிவானது. 
 
Gard மாவட்டத்தின் Gallargues-le-Montueux எனும் நகரம். 
 
ஜூன் மாதம் 28 ஆம் திகதி, மாலை 4:20 மணிக்கு அந்த சாதனை நிகழ்ந்தது. 
 
45.9°c எனும் இமாலய வெப்பம் பதிவானது. 
 
இந்த வெப்பத்தை பதிவு செய்த Météo-France, 'இதற்கு முன்னர் பிரான்சில் எங்கேயும் இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை!' என்பதையும் உறுதி செய்தது.
 
இன்றுவரை இந்த சாதனை தொடர்கிறது. 2020 ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்