Paristamil Navigation Paristamil advert login

Michel Barnier அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை!

Michel Barnier அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை!

5 ஐப்பசி 2024 சனி 08:31 | பார்வைகள் : 463


பிரதமர் Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்து, இடதுசாரி முன்னணி நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) ஒன்றை கொண்டுவந்துள்ளது.

Nouveau Front populaire கூட்டணியைச் சேர்ந்த 192 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். ஒக்டோபர் 8, செவ்வாய்க்கிழமை அன்று இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்பாக வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Nouveau Front populaire கூட்டணியினர் முன்மொழியும் ஒருவரையே பிரதமராக அறிவிக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

“இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்களிப்பது என்பது, குடியரசுக் கட்சியின் பாரம்பரியத்தை மதிக்கத் தவறியதைக் கண்டனம் செய்வதற்காகும்.” என அந்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்