தாய்லாந்தில் மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான உணவு
5 ஐப்பசி 2024 சனி 11:15 | பார்வைகள் : 2576
தாய்லாந்துக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க மக்கள் சுற்றுலா செல்கின்றனர். ஆனால் ஒருவர் கூட Koi pla என்ற அந்த உள்ளூர் உணவை சாப்பிட முயல வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமைக்கப்படாத மீன் மற்றும் மசாலா, எலுமிச்சை நீர் உள்ளிட்டவைகளால் அரைத்து உருவாக்கப்படும் அந்த உணவை ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது உறுதி என கூறுகின்றனர்.
அந்த உணவுக்கு மூலப்பொருளாக நன்னீர் மீன் ஒன்றை பயன்படுத்துகின்றனர். அந்த மீனில் இருக்கும் liver fluke என்ற ஒட்டுண்ணி புழுக்கள் உடலுக்குள் சென்று புற்றுநோயை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்புடைய மீன் உணவை சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே வகையை சேர்ந்த pla som, pla jom மற்றும் pla ra ஆகிய உணவு வகைகளும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றே எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், இந்த உணவுகள் தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இன்னும் பிரபலமாக உள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு பிரபலமாகாதவை.
ஒவ்வொரு ஆண்டும் பித்த நாள புற்றுநோயால் 20,000 தாய்லாந்து மக்கள் இறக்க முதன்மை காரணம் இந்த மீன் உணவு என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.