பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பம் எவ்வளவு? - எங்கே..??
4 வைகாசி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 18629
பிரான்சில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ளது. இவ்வருடமும் அதிக வெப்பம், புதிய சாதனை என களை கட்டும் என நம்பலாம்.
சரி, இதுவரை பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்ப அளவு என்ன? எங்கு பதிவானது??! இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அறிந்துகொள்வோம்.
2003 ஆம் ஆண்டின் ஜூன் மாத நாள் ஒன்றில், தென்கிழக்கு பிரான்சின்
Carpentras நகரில் முதல் அதிகூடிய வெப்பம் பதிவானது.
44.1°c எனும் வரலாற்றில் இல்லாத அளவு வெப்பமாக பதிவானது.
***
2003 ஆம் ஆண்டு பிரான்ஸ் முழுவதுமே அதீத வெப்பம் நிலவியது. கிட்டத்தட்ட 10,000 பேருக்கும் மேல் வெயில் காரணமாக அவ் வருடத்தில் உயிரிழந்தனர்.
***
Carpentras நகரில் பதிவான 44.1°c எனும் வெப்பத்தினை முறியடிக்க இயற்கை நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை.
அன்றைய தினமே, ஒருமணிநேரம் கழித்து, 44.1°c வெப்பம் முறியடிக்கப்பட்டது.
Provence மாவட்டத்தில் உள்ள Villevieille நகரில் 45.1°c எனும் வெப்பம் பதிவானது.
ஒருமணிநேரத்தில் மீண்டும் புதிய சாதனை. அது வரை பிரான்சில் வானிலை ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து இத்தனை அளவான வெப்பம் பதிவாகியிருக்கவில்லை.
****
2019 ஆம் ஆண்டின் கோடை காலம் வரும் வரை... இந்த சாதனை நீடித்தது.
(நாளை)