பெண்கள் உலக கோப்பை டி20 - பாகிஸ்தான் கேப்டனை பாராட்டிய இலங்கை கேப்டன் சாமரி
5 ஐப்பசி 2024 சனி 11:33 | பார்வைகள் : 1097
பெண்கள் உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனாவை இலங்கை அணி கேப்டன் சாமரி அதபத்து வாழ்த்தியுள்ளார்.
ஐசிசி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து மொத்தமாக 116 ஓட்டங்கள் மட்டுமே குவித்து இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
சுலபமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிய போதிலும் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணியால் 85 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் ஐசிசி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
போட்டியின் நிறைவுக்கு பிறகு நெறியாளரிடம் பேசிய இலங்கை கேப்டன் சாமரி அதபத்து(Chamari Athapaththu) முதலில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவை(Fatima Sana) பாராட்ட வேண்டும், அவர் உண்மையில் அணியை முன்னாள் நின்று வழிநடத்தினார்.
120 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்து போராடினோம், இங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ப சரி நாங்கள் செய்ய வேண்டும், அதை குறை கூற முடியாது.
நாங்கள் நன்றாக பந்துவீசினோம், ஆனால் நாங்கள் இந்த சூழ்நிலையில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என இலங்கை கேப்டன் சாமரி அதபத்து தெரிவித்துள்ளார்.