வனிதா விஜயகுமார் - ராபர்ட் மாஸ்டர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
5 ஐப்பசி 2024 சனி 11:54 | பார்வைகள் : 1689
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்த புகைப்படம் வெளியாகி, அக்டோபர் ஐந்தாம் தேதி இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? அல்லது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப் போகிறார்களா? என்பதில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்திற்கு "Mrs & Mr" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி வனிதா விஜயகுமார் இயக்கவுள்ளார் என்பதும், அவரது மகள் ஜோதிகா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். முதன்முதலாக தயாரிப்பு மற்றும் இயக்கம் என்ற துறையில் களமிறங்கியுள்ள வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஒரு நல்ல என்டர்டைன்மெண்ட் படத்தை கொடுப்பார்கள் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.