Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் அதர்வா ..?

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் அதர்வா ..?

5 ஐப்பசி 2024 சனி 14:49 | பார்வைகள் : 1184


தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று உச்சம் நோக்கி நகர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று பலரும் வியந்து பாராட்டும் வெற்றி படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31 (தீபாவளி) அன்று 'அமரன்' படம் வெளியாகவுள்ளது.

'அமரன்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே 23' படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு.

 ஏ.ஆர்.முருகதாஸின் 'எஸ்கே 23' படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவிருக்கும் 'புறநானூறு' படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை தட்டி சென்றது. இதே கூட்டணி மீண்டும் 'புறநானூறு' படத்தில் இணையவிருந்தது.

'புறநானூறு' படத்தில் சூர்யா நடிக்க படத்தை சூர்யாவின் 2D கிரியேஷன்ஸ் தயாரிக்கவிருந்தது. ஆனால் கால் ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் சூர்யா 'புறநானூறு' படத்தில் இருந்து விலக நேர்ந்தது. இதனால் சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயனை தேர்வு செய்தார் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்கவிருக்கும் மேலும் ஒரு நடிகர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'புறநானூறு' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது, வில்லன் வேடத்தில் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு, வில்லனாக இல்லை சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

தம்பி ரோல் செட் ஆகாது என்று லோகேஷ் படத்தை விட்டு விலகியதாகவும் கூறப்பட்ட வரும் நிலையில், படத்தில் தற்போது அதர்வா தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 'புறநானூறு' படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 'புறநானூறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக பிரபல நடிகை ஸ்ரீலீலா களமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்