Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் உள்ள இரண்டு ஈஃபிள் கோபுரங்கள்..!!

சீனாவில் உள்ள இரண்டு ஈஃபிள் கோபுரங்கள்..!!

27 சித்திரை 2020 திங்கள் 11:30 | பார்வைகள் : 19474


ஈஃபிள் கோபுரம் பரிசில் மட்டும் இல்லை... மேலும் பல நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களிலும் உள்ளன. 
 
ஆனால் அவை அனைத்து 'மாதிரி' வடிவங்கள் தான். 
 
அமெரிக்காவில் உள்ள ஈஃபிள் கோபுரம் குறித்து முன்னதாக அறிந்துகொண்டோம். இன்றைய பிரெஞ்சு புதினத்தில், சீனாவில் உள்ள ஈஃபிள் கோபுரம் பற்றி அறிந்துகொள்வோம். 
 
மொத்தம் இரண்டு ஈஃபிள் கோபுரங்கள் சீனாவில் உள்ளன. 
 
Dragon Tower..! 
 
 
சீனாவின் Heilongjiang மாகாணத்தில் Harbin நகரத்தில் உள்ள இந்த கோபுரம் ஈஃபிள் கோபுரத்தின் பாதிப்பில் உருவானது. ஆனால் உச்சத்தில் சதுரமாக இருந்தால் 'ஈஃபிள் கோபுரம்' போன்றே இருக்கும் என்பதால் சதுரத்துக்கு பதிலாக வட்டமாக மாற்றி விட்டார்கள். 
 
1999 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, 2000 ஆம் ஆண்டு திறப்பு விழா செய்துவிட்டார்கள். 
 
மேலே உள்ள 'அண்டனா'வுடன் சேர்ந்து 335.89 மீற்றர் உயரம் கொண்டது இந்த கோபுரம். 
 
°°°°°°°°
 
Tianducheng Eiffel Tower..!! 
 
 
இந்த செய்தி தான் உங்களை மிக அதிச்சிக்குள்ளாக்க உள்ளது. 
 
சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Hangzhou எனும் ஒரு நகரம் உள்ளது. இது ஒரு 'குட்டி பரிஸ்' என்றே சொல்லலாம்.  Tianducheng என அழைக்கப்படும் இந்த பகுதியை பார்த்தால் பரிசை நேரில் பார்ப்பது போன்றே இருக்கும். 
 
பரிஸ் போன்று இருந்தால், ஈஃபிள் கோபுரம் இருக்காதா பின்னே?
 
108 மீற்றர் உயரத்தில் அச்சு அசல் ஈஃபிள் கோபுரம் போன்று ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார்கள். 
 
இங்கு 'சோம்ப்ஸ்-எலிசே' எல்லாம் உள்ளது. அது குறித்து பின்னர் பார்க்கலாம். 
 
இந்த நகரத்துக்கு 'பரிஸ் 2' எனவும் ஒரு பெயர் உள்ளது. 2007 ஆம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. 
 
°
 
உலகம் முழுவதும் இது போன்று ஈஃபிள் கோபுரத்தினை 'மாதிரியாக' கொண்டு பல கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
ஆனால் பரிசில் உள்ள எங்களது ஈஃபிள் கோபுரம் போன்று எதுவுமில்லை. அதனாலேயே வருடத்துக்கு பத்து மில்லியன் பார்வையாளர்களை சந்தித்து, உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது ஈஃபிள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்