Paristamil Navigation Paristamil advert login

காதல் சுவர்! - பரிசில் அவசியம் பார்க்கவேண்டிய இடம்..!!

காதல் சுவர்! - பரிசில் அவசியம் பார்க்கவேண்டிய இடம்..!!

26 சித்திரை 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21373


பரிஸ் நகரம் காதலுக்கு பெயர் போனது. காதலை பிரதானப்படுத்தும் எத்தனையோ விடயங்கள் இங்கு உள்ளன. 
 
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் காதலை வெளிப்படுத்தும் ஒரு அட்டகாசமான இடத்தை தான் பார்க்கப்போகின்றோம். அதன் பெயர் 'காதல் சுவர்'.
 
Le mur des je t'aime என அழைக்கப்படும் இந்த இடம் ஒரு மிக நீண்ட 'சுவர்'.
 
430 சதுர அடி அளவில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான மதில் சுவரில் அப்படி என இருக்கின்றது??!
 
 <<je t'aime>>  எனும் நான் உன்னை காதலிக்கிறேன் எனும் வார்த்தையை இதில் எழுதி வைத்திருக்கின்றார்கள். ஒன்று இரண்டு அல்ல... 250 மொழிகளில்...!! 
 
கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. 
 
பிரபலமான மொழிகளோடு, வட அமெரிக்காவில் பேசப்பட்ட நவஜோ மொழி, இன்யூட் மொழி, மாலி நட்டின் தேசிய மொழியான பம்பாரா, இரஷ்யாவின் பழங்காலத்து மொழியான எஸ்பெராண்டோ என மிக அரிதான மொழிகளிலும் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. 
 
250 மொழிகளில் மொத்தம் 311 தடவைகள் எழுதப்பட்டுள்ளன. 
 
 
இந்த காதல் சுவற்றை பார்வையிடுவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இலவசமாக பார்வையிடலாம். 
 
கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள இந்த சுவர், விரைவில் திறக்கப்படும் என நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீங்கள் மறக்காமல் சென்று இதை பார்வையிடுவதுடன் தமிழில் எழுதியிருப்பதையும் பார்த்து ரசியுங்கள்..!! 
 
முகவரி : Square Jehan Rictus, Place des Abbesses, 75018 Paris. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்