பொது மக்களை ஈர்க்கும் ஸ்மார்ட் மோதிரங்கள்!
6 ஐப்பசி 2024 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 1055
ஸ்மார்ட் மோதிரங்களின் முன்னணி தயாரிப்பாளரான Oura தங்களுடைய Oura Ring 4 என்ற புதிய தலைமுறை சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மனித உடல் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டு கண்காணிப்பு திறன்களை வழங்குகிறது.
ஸ்டைலான டைட்டானியம் வளையம் ஆறு ஸ்டைலான வண்ணங்களிலும் பன்னிரண்டு அளவுகளில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்
Oura இன் ஸ்மார்ட் சென்சிங் தொழில்நுட்பத்தை Oura Ring 4 உள்ளடக்கியது, இந்த நவீன தொழில்நுட்பம் சிக்கலான அல்காரிதம் மற்றும் உணர்விகளின் தொகுப்பைப் பயன்படுத்தி முக்கிய மனித உடல் ஆரோக்கிய அளவீடுகளை கண்காணிக்கிறது.
மோதிர வளையம் தூக்கத்தின் போது இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிட சிவப்பு மற்றும் அகச்சிவப்பு LED களை உள்ளடக்கியது. மேலும் இதயத் துடிப்பு, இதயத் துடிப்பு மாறுபாடு மற்றும் சுவாச விகிதத்தை அளவிட பச்சை மற்றும் அகச்சிவப்பு LED களை கொண்டுள்ளது.
மேலும் இவை மன அழுத்தம், செயல்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதன் மூலம், பயனர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் விரிவான புரிதலை வழங்குகிறது.
Oura Labs, சோதனை சிறப்பியல்புகளுக்கான ஒரு தளம், iOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது. Oura Ring 4 ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 நாள் வரையிலான பற்றரி ஆயுளை கொடுக்கிறது.
USB Type-C சார்ஜிங் கேபிள் உடன் வருவதால் இவை தடையற்ற சார்ஜிங் அனுபவத்தை உறுதி செய்கிறது.
Oura Ring 4 தற்போது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் முன்பதிவுக்கு கிடைக்கிறது.
டெலிவரி ஒக்டோபர் 15 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
$349 (தோராயமாக £290) விலையில், Oura Ring 4 100 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு தரத்தை கொண்டுள்ளது.