கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
6 ஐப்பசி 2024 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 1928
அபுதாபியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் மற்றும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஆண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பெண்ணிடமிருந்து 24,200 சிகரெட்டுகளும் (121 கார்டூன்கள்) மற்றைய நபரிடமிருந்து 24,600 சிகரெட்டுகளும் (123 கார்டூன்கள்) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.