ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கும் Nouvelle-Aquitaine மாகாணம்..!!
10 சித்திரை 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19424
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் Nouvelle-Aquitaine மாகாணம் குறித்து சில அச்சரியமான செய்திகளை அறிந்துகொள்ளலாம்.
பிரான்சில் உள்ள மாகாணங்களில் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாகாணம் Nouvelle-Aquitaine தான். கிட்டத்தட்ட 84,061 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்டது இந்த மாகாணம்.
ஒஸ்ட்ரியா நாட்டினை விட பெரியது இந்த மாகாணம்.
58 இலட்சம் மக்களுக்கு மேல் இங்கு வசிக்கின்றனர்.
இங்கு மொத்தம் 12 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் மிக பிரபலமானது. பொருளாதாரத்திலும், செல்வாக்கிலும் ஒன்றை ஒன்று சளைத்ததில்லை.
இந்த மாகாணத்துக்கு தலைநகரமாக உள்ளது Bordeaux. இங்கு 1,140,668 பேர் வசிக்கின்றனர். (பிரெஞ்சு நகரங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஏழாம் இடம்)
தவிர இங்கு 25 பாரிய நகரங்கள் உள்ளன.
இல்-து-பிரான்சுக்கு பின்னர் தொழில்நுட்ப வசதியிலும், ஆராய்ச்சியிலும் தலை சிறந்து விளங்குகின்றது இந்த மாகாணம். அதற்கேற்றால் போல் பல பிரபலமான பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ளன.
விவசாயமும், சுற்றுலாத்துறையும் பிரதான வருவாயை கொண்டுவருகின்றது இங்கு. இயற்கை வளமும் கொட்டிக்கிடக்கின்றது இந்த Nouvelle-Aquitaine மாகாணத்தில்...!!