பரிஸ் : உள்துறை அமைச்சரின் உறவினர் வீட்டில் கொள்ளை! - €100,000 யூரோக்கள் மாயம்!

6 ஐப்பசி 2024 ஞாயிறு 14:09 | பார்வைகள் : 8613
உள்துறை அமைச்சர் Bruno Retailleau இன் உறவினர் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. €100,000 யூரோக்கள் பெறுமதியான நகைகள், பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில், குறித்த வீட்டுக்கு நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகை போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அங்கு வசித்தவர் 74 வயதுடைய பெண் ஒருவர் எனவும், அவர் உள்துறை அமைச்சர் Bruno Retailleau இன் உறவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் காவல்துறையினர் மேற்கொண்ட உடனடி விசாரணைகளில் கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1