Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் இவர்கள் தான்..

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் இவர்கள் தான்..

6 ஐப்பசி 2024 ஞாயிறு 16:09 | பார்வைகள் : 2080


பிக்பாஸ் எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு சமையல் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருக்கிறது. இருப்பினும் இது ரியாலிட்டி ஷோ என்பதனுடன் போட்டியாளர்களின் மனநிலை, ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கணித்து அவர் சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா என்பது போக போக தெரியவரும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கோலாகலமாக இன்று (அக்.,6) துவங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் களமிறங்குகின்றனர்.

1. ரவீந்தர் சந்திரசேகர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராக இருந்த ரவீந்தர் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

2. சஞ்சனா

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள இளம் போட்டியாளர் என்றால் அது சஞ்சனா தான். இவர் விஜய் சேதுபதியின் மாஸ் ஹிட் படமான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

3. தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தாவும் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடித்ததோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

4. சத்யா

சீரியல் நடிகர் சத்யா பிக்பாஸ் சீசன் 8ல் கலந்துகொண்டுள்ளார். இவர் அண்ணா சீரியலில் வில்லனாக நடித்து பேமஸ் ஆனார். இவரது மனைவி ரம்யா பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. தீபக்

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் தீபக். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.


6. சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் சிறந்த நடனக் கலைஞராகவும் தன்னுடையை திறமையை நிரூபித்து இருக்கிறார்.

7. கானா ஜெப்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருடந்தோறும் ஒரு பாடகரை அனுப்புவார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜெப்ரி என்பவரை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கானா பாடல் பாடுவதில் கில்லாடி.

8. ஆர்.ஜே.ஆனந்தி

ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றி பின்னர் கோமாளி படத்தில் நடிகர் யோகிபாபுவுக்கு மனைவியாக நடித்து பேமஸ் ஆனவர் தான் ஆர்.ஜே.ஆனந்தி. இவரும் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார்.

9. ரஞ்சித்

தமிழில் நடிகராக கலக்கி வந்தவர் ரஞ்சித். இவர் அண்மையில் கவுண்டம்பாளையம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவரும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

10. பவித்ரா ஜனனி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பவித்ரா ஜனனி. இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

11. தர்ஷிகா

விஜய் டிவி சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி அண்மையில் நடந்து முடிந்த ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்திய தர்ஷிகா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

12. அர்னவ்

செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அர்னவ். அந்த சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் சீரியல் நடிகர் அர்னவ்.

13. அன்ஷிதா

செல்லம்மா சீரியலில் அர்னவிற்கு ஜோடியாக நடித்த அன்ஷிதாவும் பிக்பாஸ் 8-ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் குக் வித் கோமாளி 5ல் கோமாளியாக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14. விஜே விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே விஷால். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

15. முத்துக்குமார்

யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, இன்ஸ்டாவில் பிரபலாமனவராக இருக்கும் முத்துக்குமார் பிக்பாஸ் 8-ல் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்கிற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் ஆவார்.

16. ஜாக்குலின்

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பேமஸ் ஆனவர் ஜாக்குலின். இவரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

17. செளந்தர்யா

ஆதித்ய வர்மா, தர்பார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தவர் செளந்தர்யா. இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து உள்ளார்.

18. அருண் பிரசாத்

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து பேமஸ் ஆனவர் அருண் பிரசாத். இவரும் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்