உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 5)
9 சித்திரை 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19576
தொன் கணக்கில் இறைச்சிகளும், மீன்களும் காய்கறி பழங்களும் கொண்டுவரப்டும் இந்த சந்தையில் வருடத்துக்கு 1,698,000 தொன்கள் உணவுப்பொருட்கள் விற்பனையாகின்றன.
உலகில் உள்ள அனைத்து சந்தைகளுடனும் ஒப்பிடுகையில் இந்த சந்தையே அதிகளவு வருவாயை சந்திக்கின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டு பிரான்சில் அதிகளவான வெப்பம் நிலவியது. அப்போது பலர் உயிரிழந்துள்ளனர். அப்போது உடலங்களை வைப்பதில் பிணவறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
பின்னர் அரசில் அறிவுறுத்தலின் பேரில் இந்த சந்தையின் ஒரு பகுதி பிணவறையாக பயன்படுத்தப்பட்டது. இங்கு 5°c குளிரில் உடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல், தற்போது கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கும் இந்த Rungis International Market சந்தை பயன்படுத்தப்படுகின்றது.
கடந்த வருடத்தில் மஞ்சள் மேலங்கி போராளிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது போராட்டக்காரர்கள் இந்த சந்தையின் வாசலை முற்றுகையிட்டு சந்தையை முடக்கினர்.
எவ்வழியிலாவது அரசின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப மஞ்சள் மேலங்கி போராளிகள் மேற்கொண்ட பல ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்று.
இதுபோன்று பல ஆச்சரியங்களுடன் இயங்கி வருகின்றது இந்த Rungis சர்வதேச சந்தை..!!