உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 4)
8 சித்திரை 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19036
இங்கு தினமும் 13,000 பேர் வேலை செய்கின்றனர் என தெரிவித்தோம் இல்லையா.. அவர்கள் அனைவருக்கும் வேலை நள்ளிரவு 1 மணிக்குத்தான் ஆரம்பிக்கின்றது.
ஏன்?
ஏனென்றால் சந்தை அப்போது தான் திறக்கப்படுகின்றது. தினமும் நள்ளிரவு 1 மணிக்கு திறக்கப்படும் இந்த சந்தை காலை 11 மணி வரை இயங்குகின்றது.
மிக நீண்ட பார ஊர்திகள் மூலம் உணவு பொருகள், இறைச்சிகள் இங்கு கொண்டுவரவும், கொண்டுசெல்லவும் படுகின்றது.
பகல் நேரத்தில் இந்த வேலைகளை பார்த்தால் ஒட்டுமொத்த வீதிகளும் போக்குவரத்தால் நிரம்பி வழியும் என்பதால் நள்ளிரவை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஊர் மொத்தமும் அடங்கி, தூங்கிக்கொண்டிருக்கும் போது இவர்கள் ஊருக்கு தேவையான உணவு பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
அப்படி தினமும் 26,000 வாகனங்கள் இங்கு வந்து செல்கின்றன. அவற்றில் கனரக ட்ரக் (ரெயிலர் வாகனம்) மாத்திரம் 3,000 வரை வந்து செல்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் வந்து நின்றாலும் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாத மிகப்பெரிய சந்தை இது..
இன்னும் இருக்கின்றன ஆச்சரியங்கள்..
-நாளை.