உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 3)
5 சித்திரை 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18982
சரி, சந்தை எவ்வளவு பெரியது என பார்த்தோம். சந்தையில் எத்தனை பேர் பணி புரிகின்றார்கள் என பார்க்கலாமா?
அதற்கு முன்னர்....
இந்த சந்தை பகலில் திறப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த சந்தை திறக்கப்படுவதே நள்ளிரவு 1 மணிக்குத் தான்.
நள்ளிரவு 1 மணிக்கு திறக்கப்படும் சந்தை காலை 11 மணிக்கெல்லாம் மூடப்பட்டுவொடும்.
இங்கு தினமும் 13,000 பேர் வேலை செய்கின்றனர். நீங்கள் வாசித்த அந்த இலக்கம் சரியானது தான். 13,000 பேர்.
இவர்கள் அனைவரும் இரவு 1 மணிக்கு வேலைக்கு வந்து, காலை 11 மணிக்கு வீடு திரும்புவார்கள்.
சரி ஏன் இந்த சந்தை நள்ளிரவில் திறக்கப்படுகின்றது?
காரணம் இருக்கின்றது.
இதுபோன்ற 'மொத்த' விற்பனை சந்தைக்கு பொருட்கள் மிக பெரிய நீண்ட வாகனங்களில் வந்து சேருகின்றது. வாகனங்களின் பயணங்களை இலகுவாக்க 'ஊர் அடங்கியதன்' பின்னர் நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பிரான்சில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்கள் இங்கு குவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றது.
இங்கு அதிகளவில் விற்பனை செய்யப்படும் உணவு எது தெரியுமா?
மீனும் இறைச்சியும் தான்.
மீன் என்றால் கிலோ கணக்கில் இல்லை.. தொன் கணக்கில். பரிசில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மீனும் இந்த சந்தை ஊடாக வருவதே.
-நாளை.