உலகின் மிகப்பெரிய சந்தை! - ஒரு ஆச்சரிய தொடர்..!! (பகுதி 2)

4 சித்திரை 2020 சனி 10:30 | பார்வைகள் : 22866
பரிசை விட்டு வெளியே சந்தையை கொண்டு செல்வதென்றால் எங்கே கொண்டு செல்லலாம் என திட்டமிடப்பட்டது..
அப்போது தான் Rungis நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனென்றால் இங்கு நெடுஞ்சாலைகளை இணைப்பது இலகுவாக இருந்தது. தொடருந்துகளை இணைக்கவும் ஓர்லி சர்வதேச விமான நிலையத்தை இணைக்கவும் இலகுவாக இருந்ததால் இந்த பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு Rungis நகருக்கு இந்த சந்தை மாற்றப்பட்டது. பத்து ஹெக்டேயர்கள் நிலப்பரப்பில் இருந்து இங்கு புதிதாக அமைக்கப்பட்ட சந்தையின் நிலப்பரப்பு எவ்வளவு தெரியுமா..??
232 ஹெக்டேயர்கள்.
அதாவது 537 ஏக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டரை சதுர கிலோமீற்றர்கள். (அடேங்கப்பா..),
SEMMARIS எனும் பிரெஞ்சு நிறுவனம் தான் இந்த சந்தையை நிர்வகிக்கின்றது. இந்த சந்தையை பராமரிப்பதற்கும், அதன் தரம் கெடாமல் பார்த்துக்கொள்வதற்கும் இன்னபிற கொடுக்கல் வாங்கல் சிக்கல்களை தவிர்ப்பதற்கும் இவர்கள் பணியாற்றுகின்றார்கள்.
இவ்வளவு பெரிய சந்தையில் சுமார் எத்தனை பெயர் வேலை செய்வார்கள்..?? எண்ணிக்கையை கேட்டால் மலைத்துப்போவீர்கள்...
- நாளை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025