சர்வதேச போட்டியில் substitute ஆக ஃபீல்டிங் செய்த பயிற்சியாளர்! கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு
8 ஐப்பசி 2024 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 1118
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஜே.பி.டுமினி மாற்றுவீரராக ஃபீல்டிங் செய்தார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடந்தது.
இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 284 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் பவுல் ஸ்டிர்லிங் 88 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களே எடுத்தது. ஜேசன் ஸ்மித் 91 ஓட்டங்கள் குவித்தார்.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது கடுமையான வெப்பத்தினால் வீரர்கள் சோர்வடைந்தனர்.
அப்போது துடுப்பாட்ட பயிற்சியாளர் ஜே.பி.டுமினி (JP Duminy) Substitute வீரராக களமிறங்கி தமது அணிக்காக ஃபீல்டிங் செய்தார்.
கிரிக்கெட்டில் பயிற்சியாளர் ஒருவர் Substitute ஆக ஃபீல்டிங் செய்தது அரிய நிகழ்வாகும். தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் தோல்வியுற்றிருந்தாலும், ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.